"எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புண்ணியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது"

Monday, November 14, 2011

பொக்கிஷம் !!!

என் பெரும்பான்மையான குழந்தைப் பருவ இரவுகள் பாட்டி சொன்ன கதைகளுடன் முடிந்தன. ஒரு நாள் நான் எழுந்துவிட்டேன்..பாட்டி படுத்தேஇருந்தார்... என் கைமீது விரல்கள் விரிந்தனபாட்டியின் உயிரும் பிரிந்தது.இன்றுதான் எனக்குப் புரிகிறது அன்று பாட்டி எனக்குத் தந்தது பரம்பரைப் பெருமையும் பந்தபாசமும்தான் என்று. என் பாட்டி சொன்ன கதைகளை விலைமதிப்பற்ற பொக்கிஷமாக மதிக்கேறன்..எனக்கு மிக மிக பிடித்த கதை இது தான்..இதை எல்லாம் நான் இங்கு எழுதுவதற்கு காரணம் ஒன்று தான்..நாளை வரும் காலத்தில் என் மகன் அவன் பூர்விகத்தை மறக்க கூடாது ...

இந்தியாவின் வடக்கே ஒரு ஊரில் ஒருவனுடைய தாய் தந்தை ஆகிய இருவருக்கும் கண்கள் தெரியாது. அவனுடைய பெயர் ராமன். ராமன் சிறு வயதில் இருந்து தன் பெற்றோர்க்கு தேவையான (உணவு,உடை) போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்த்து அவர்களது மனம் நோகாமல் நடத்து வந்தான். அது மட்டும் அல்லாமல் அவன் வசித்து வந்த வீடு புண்ணிய நதியான கங்கைக்கு அருகில் உள்ளது. நாள் தோறும் கங்கையில் நீராடப் பல ஞானிகள், ரிஷிகள் நடத்து யாத்திரை செல்வதுண்டு. இவன் யாத்திரை வருபவர்களுக்கு தங்க இடமும் உண்ண உணவும் கொடுத்து வந்தான்...

ஒரு நாள் யாத்திரையாக வந்த மூன்று ரிஷிகள் ராமன் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தனர். அவர்களுக்கு உணவு தயார் செய்து சாப்பிட அழைத்தான். சாப்பிட வந்தவர்கள் ராமா நீ பலத் தடவை கங்கையில் நீராடி இருக்கிறாயா என்று கேட்டனர். அதற்கு ராமன் நான் எனது பெற்றோர்களுக்கு தேவையானப் பல வேலைகளை முடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது ஆகையால் நான் இது வரைக்கும் கங்கையைப் பார்த்தது கூட இல்லை என்றான். மிகவும் கோபம் கொண்ட ரிஷிகள் உலகத்தின் பலப் பகுதிகளில் இருந்து கங்கையைப் பார்க்க வருகின்றனர் நீ கங்கை அருகில் இருத்தும் செல்லவில்லை என்றால் நீ எவ்வளவு பாவம் செய்தவனாக இருக்க வேண்டும் உன் வீட்டில் சாப்பிடுவது பாவம் என்று ராமன் வீட்டில் சாப்பிடாமல் யாத்திரை சென்றுவிட்டனர். ராமனுக்கு மிகவும் வருத்தம். கங்கையின் பாதையைத் தேடிப்போன ரிஷிகள் சென்று கொண்டே இருந்தனர் கங்கையை காணவில்லை. மிகவும் வருத்தத்துடன் வந்து கொண்டிருத்த ரிஷிகள் கங்கை ராமன் வீட்டின் வெளியேப் பாய்வதை கண்டனர். என்ன அதிசயம் என்று பார்க்க ஒரு சப்தம் மட்டும் கேட்டது.

எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புண்ணியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது.

என் தந்தை இதை என் பாட்டி இறக்கும் வரை பின்பற்றினார்.....

No comments:

Post a Comment