"எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புண்ணியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது"

Saturday, November 12, 2011

எனக்கொரு சந்தேகம்...

1. கஷ்டப்பட்டு என்னோட குழந்தை டாடா காமிச்சா, "இந்தக் கையாலயா சொல்வாங்க? அந்தக் கையால காமி" ன்னு ஏன் எல்லாரும் சொல்றாங்க?

2. ரொம்ப சாஸ்த்திரம், சம்ப்ரதாயம் பாக்கற மாமிகள், பாட்டிகள் கூட சந்திகால வேளையில, டிவில சீரியல் பாக்கறேன் பேர்வழின்னு அதுல காட்ற எழவு, ஒப்பாரி எல்லாத்தயும் ஃபுல் வால்யூம்ல வெள்ளிக் கிழமைன்னு கூட கண்டுக்காம எப்படி பாக்கறாங்க?

3. இந்த பெரிசுங்க எல்லாம் குழந்தை பேர முதல்ல கேட்கறாங்களோ இல்லையோ, "என்ன நட்சத்திரம்" ன்னு எதுக்கு கேட்கறாங்க? அது தெரிஞ்சு என்ன பண்ண போறாங்க?

4. "நீ வாயத்திறந்து சொன்னா தான தெரியும்? உன் மனசுலயே நினைச்சுக்கிட்டு இருந்தா எனக்கு எப்படித் தெரியும்" ன்னு என் கிட்ட கேக்கறவங்க எல்லாம் அவங்க மனசுல நினைக்கறத மட்டும் நான் புரிஞ்சு நடக்கணும்னு எப்படி எதிர்ப்பாக்கறாங்க?

5. கணவன்-மனைவி பிரச்னையா? மாமியார்-மருமகள் பிரச்னையா? மனசு சரியில்லையா? வேலை சரியா அமையலையா? இதயக் கோளாறா? இல்லை கேன்சரா? - "ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியா போய்டும்"ன்னு எந்த கேணையன் சொன்னான்?

No comments:

Post a Comment