"எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புண்ணியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது"

Saturday, November 12, 2011

நான் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.

அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின் அவசர தாலாட்டு தான் கவியரசு வைரமுத்து சொல்லும் இந்த கவிதை.

இந்த அவசர நுற்றாண்டில் இருதயம் துடிக்கும் இயந்திரங்களாய் மாறிவிட்டது. மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு வயலின் வாசிக்கிறான். குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது. காதலிக்கு வாங்கிய மல்லிகை பூ டீசல் புகையில் கருபாகிவிடுகிறது. இப்படி நிறம் மாறும் ஒரு வாழ்க்கையில் தாய் பாடும் ஒரு தாலாட்டு மட்டும் தடம் மாறிபோகாமல் இருக்குமா என்ன? எனவே தான் ஒரு குழந்தைக்கு முன்னிரவில் பாட பட வேண்டிய தாலாட்டு முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது..

ஆனால், பொருளாதார விடுதலை கூட கூட சில புதிய விலங்குகளை பூட்டியிருந்தது என்று இனம் கண்டு கொண்டவள் இந்த நுற்றாண்டு பெண். சிறகு இருந்தும் பறக்க முடியவில்லை என்று விமியவன் வீட்டுக்குள் இருந்த பெண்.

பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லை என்று விசுபுகிறவள் வேலைக்கு போகிற பெண்.

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!

அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!

ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!

9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய் -
தங்க மடியில் தூங்குவதாய் -
கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

புட்டிபால் குறையவில்லை -
பொம்மைக்கும் பஞ்சமில்லை -
தாய்ப்பாலும் தாயும் இன்றி -
தங்க மகனுக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!

No comments:

Post a Comment