"எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புண்ணியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது"

Saturday, November 12, 2011

என் கவிதை ஆர்வம்...

"பிழைகள் இருந்தால்(கண்டிப்பா இருக்கும்!) பொருத்தருள்வீர்களாக"! இந்த க், ச் இதெல்லாம் வேண்டாத இடத்துல இருந்தாலோ, வேண்டிய இடத்துல இல்லைனாலோ கண்டுக்காதீங்க. அதெல்லாம் தமிழம்மா சொல்லிக் குடுக்கும் போது நான ட்ராமா ப்ராக்டீஸ்க்கு போயிட்டேன்! மத்தபடி வேற பிழைகள் எதாவது இருந்தால் கண்டுக்காதீங்க ..இப்ப தான் தமிழ்ல டைப் பண்ண ஆரம்பிச்சு இருக்கேன். அநியாயத்துக்கு பொறுமை வேண்டிருக்கு...

நான் என்னுடைய முதல் கவிதையை எழுதியது என் பத்து வயதில்..அது ஒரு நிலா பற்றிய கவிதை..அதை என் அம்மாவிடம் காட்டிய போது கிடைத்த பரிசு திட்டுக்கள்..அவருக்கு ஏன்னோ கவிதை பிடிக்கவில்லை ..ஒரு வேளை என் கவிதை பிடிக்கவில்லை என நினைக்கின்றேன்...அத்துடன் முடிந்த என் கவிதை மீண்டும் உயிர்த்து எழுந்தது என் கல்லூரி வாழ்கையில்...இந்த பக்கத்தில் என் கவிதை தொகுப்பை முடிந்த வரை பதிக்க விரும்புகிறேன்..

நன்றி...
இந்து

No comments:

Post a Comment